×

அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு!

டெல்லி: டெல்லி நிர்வாக சிறப்பு மசோதா குறித்த விவாதத்தில் மத்திய சென்னை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிக்கொண்டிருக்கும் போது துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி அவர் பேச அனுமதி மறுத்த நிலையில், திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில்தான் பாஜக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆளும் கட்சி வரிசையில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் விசாரணை அமைப்புகளுடன் பாஜக அரசு ரகசிய கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது எனவும் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு விசாரணை அமைப்புகள், தற்போது போன்று தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் மக்களவையில் தயாநிதி மாறன் பேசினார்.

இதையடுத்து டெல்லி நிர்வாக சிறப்பு மசோதா குறித்த விவாதத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிக்கொண்டிருக்கும் போது துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி அவர் பேச அனுமதி மறுத்த நிலையில், திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டி கொண்டிருந்தபோது இடை நிறுத்தி நேரம் முடிந்து விட்டதாக துணை சபாநாயகர் கூறியதையடுத்து வெளிநடப்பு செய்தனர்.

The post அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு! appeared first on Dinakaran.

Tags : DMK ,Delhi ,Dayanithi Maran ,Central Chennai ,Dinakaran ,
× RELATED சிறந்த மதசார்பற்ற பிரதமரை...